சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக முதல் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கத் தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தி தனது உரையைத் தொடங்கினார்.இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழர் டாக்டர் கலைஞர், இந்தியாவுக்கே வழிகாட்டிய திராவிட மாடல் ஆட்சியை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு. கருணாநிதி, ஸ்டாலின் என எங்களுடைய தலைவர்களை எல்லாம் வணங்கி என்னுடைய இந்த உரையைத் தொடங்குகிறேன்” என்றார்.
தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி, “ஒரு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சத்தி எண்பத்தி இரண்டு ஆயிரத்தி எழுநூற்றி எண்பத்தி இரண்டு வாக்குகளைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை இயக்கங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், இன்னைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற நானும் ஒரே காலேஜ்-ல படிச்ச பழைய மாணவர்கள் ஒரே காலேஜ்-ல நாம படிச்சிருந்தாலும் அரசாங்கத்தை நடத்துறதுல திமுகதான் சீனியர் பேட்ச். அது உங்களுக்கு தெரியும். 1967-ல ஆட்சிக்கு வந்தது திமுகதான். நாங்க தான் மூத்தவர்கள். அந்த அடிப்படையில எங்களுடைய அறிவு-யும் அனுபவமும்-யும் நாங்க share பண்ணிக்க தயார்-யா இருக்கோம்.
அதை ஏத்துக்க நீங்களும் தயாராக இருங்க. ஏன்னா நமக்கு எப்பவுமே தமிழ்நாட்டு நலன் தான் மிக மிக முக்கியம். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீங்க போட்டியின்றி தேர்வாகியிருக்கீங்க. மாண்புமிகு முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரான நானும் உங்கள, அவை முன்னவரும் இந்த இருக்கையில உக்கார வச்சிருக்கோம், வர வச்சிருக்கிறோம்.
இன்னைக்கு உங்க கையைப் புடிச்சு அழச்சிட்டு வந்து உக்கார வச்சிருக்கிறோம். இனி எங்க ரெண்டு தரப்பையும் நீங்கதான் கையைப் புடிச்சு அரவணைச்சு கோபம் இல்லாம, கோபப்படாம, நீங்க கோபப்பட மாட்டீங்கன்னு தெரியும். உங்களை கோபப்படுத்துற மாதிரி எந்தச் செயலையும் நாங்க செய்யமாட்டோம்" எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பங்கு
எதிர்க்கட்சியின் பங்கு குறித்து பேசிய அவர், “எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு இந்த ஆட்சி சிறப்பாக நடக்கும். மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைப்பது எதிர்க்கட்சியின் கடமை. எனவே எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “திராவிட முன்னேற்றக் கழகம் என்னைக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படும். ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்” என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்
பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைக் குறிப்பிட்ட உதயநிதி, “இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் தனது உரையை, “தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்” என்று முடித்தார்.இந்த உரை சட்டமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு எதிர்க்கட்சியாக தி.மு.க. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
