"பிரியாணி குத்து, பியூட்டி பார்லர் ஏத்து இப்ப செருப்படி" கொடுத்த திமுகவினர் ஒயாத தாக்குதல்..!!தலைவலியில் தலைமை..!!

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் பேன்சி கடை உரிமையாளரான ராஜேஸ் என்பவர் திமுக தொண்டர்கள் கடைக்குள் புகுந்து செருப்பால் அடித்த‌தால், விஷம் அருந்திய அவர்

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் பேன்சி கடை உரிமையாளரான ராஜேஸ் என்பவர் திமுக தொண்டர்கள் கடைக்குள் புகுந்து செருப்பால் அடித்த‌தால், விஷம் அருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

unknown node

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்பாடியில் செல்போன் கடை உரிமையாளரை திமுகவினர் தாக்கியதாக கூறி, அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் திமுகவினர் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானதை  தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, திமுக தொண்டர்கள்  பூபாலன் மற்றும் பவுன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

unknown node

இதே போன்று பிரியாணி கடையில்  திமுக தொண்டாரால் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் பியூட்டி பார்லர் கடை நடத்தும் பெண்ணை எட்டி உதைத்தல் போன்ற சம்வங்கள் நடந்த நிலையில் மறுபடியும் இப்படி ஒரு சம்வம் நடந்திருப்பது அக்கட்சியில் தலைமை தொண்டர்களை கட்டுபடுத்த இயலவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் விமர்சனம் செய்கின்றனர்.இது அக்கட்சியின் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

unknown node

DINASUVADU