தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அது போல் நேற்று அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.
அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஅதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
சோளிங்கர்
திருப்போரூர்
பெரம்பூர்
ஆம்பூர்
ஒசூர்
பாப்பிரெட்டிப்பட்டி
திருவாரூர்
தஞ்சாவூர்
ஆண்டிப்பட்டி
சாத்தூர்
விளாத்திக்குளம்
பூந்தமல்லி (தனித்தொகுதி)
நிலக்கோட்டை (தனித்தொகுதி)
அரூர் (தனித்தொகுதி)
குடியாத்தம் (தனித்தொகுதி)
பரமக்குடி (தனித்தொகுதி)
மானாமதுரை (தனித்தொகுதி)
பெரியகுளம் (தனித்தொகுதி)
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் எம்.பி, எம் எல் ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.