ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

The agreement was signed between DMK and Vck in the Villupuram district local government election.

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி, வாண்டி தொகுதிகளில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக – விசிக இடையேயான ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையேம், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்திருந்தது. அதுபோல், அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் என தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தொடரும் என்றும் திமுக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.