திமுக-வின் அமோக வெற்றி! சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்த அதிமுக!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆண்டிபட்டி தொகுதியில், திமுக வெற்றி பெற்றதால், 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆண்டிபட்டி தொகுதியில், திமுக வெற்றி பெற்றதால், 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை அதிமுக-வினர் காலி செய்தனர்.

ஆண்டிபட்டி தொகுதியை கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக தொடர்ந்து தக்கவைத்திருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் ஆண்டிபட்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அதிமுக – வினர் சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்ததோடு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களையும் எடுத்து சென்றுள்ளனர்.