ஹிந்தி தெரியாது போடா: ’ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது’ – கனிமொழி ட்வீட்.!

இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று திமுக மகளிரணி தலைவர் எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று திமுக மகளிரணி தலைவர் எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், யுவன் ஷங்கர் ராஜா I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டிசர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது #ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று கூறி அந்த டி சர்ட் அணிந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

unknown node