385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது..!

Dr. Radhakrishnan Award is to be given to 385 teachers.

385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும்385ஆசிரியர்களுக்கு   டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதுவழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள்விருது பெற தகுதியானவர்கள்இல்லை. 5 ஆண்டு கல்வி பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.