ஏமாற்றம் அளித்த பட்ஜெட்.. திமுக எம்.பிக்கள் என்ன செய்ய போகிறார்கள்.? இபிஎஸ் விமர்சனம்.!

Union Minister Nirmala Sitharaman - ADMK Chief secretary Edappadi Palanisamy

மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், மத்திய அரசுக்கு தமிழக அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. – எடப்பாடி பழனிச்சாமி.

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மாநில அளவில் பொறுத்தமட்டில், NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்திற்கும், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும் அதிக அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தன. மேலும், தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படவில்லை.

இதனை குறிப்பிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் பட்ஜெட் மீதான தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த பட்ஜெட் அறிக்கை வடமாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது அமையவில்லை.

குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை மட்டுமே காட்டுகிறது. தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.

திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கடந்த 2019 முதல் 2024ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதே போல இந்த முறையும் அமைதியாக காலம் தள்ள போகிறார்களா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தனது அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin-Ajith kumar
Ajithkumar Mystery Death
sivaganga lockup death
Madurai Branch of the High Court
mk stalin speech
elon musk vs donald trump