சென்னை :இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இரண்டாவது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராடிய ஆசிரியர்கள், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு திடீர் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர்.
போராட்டத்தை ஒட்டி டிபிஐ வளாகத்தில் போலீசார் முன்கூட்டியே குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் போலீசார் திணறினர். போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து “We Want CM Sir” என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம், பணி நியமனங்கள் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வலியுறுத்தினர். போலீசார் போராட்டத்தை கலைக்க முயன்ற போதிலும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்த போராட்டம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது. அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று பல தரப்பில் குரல்கள் எழுந்துள்ளன. போராட்டம் தொடர்ந்தால் கல்வித்துறை பாதிக்கப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது.
