தேர்தல் விதிமுறையை மீறிய எடப்பாடி பழனிச்சாமி – திருமாவளவன்

this news gives information about Ettapadi Palinasamy - Thirumavalavan who violated the election code-therthal vithimuraiyai

தேர்தல் பிரச்சாரங்கள் போது ராணுவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேர்தல் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க  கூட்டணிக் கட்சிகளுக்காக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல் கே சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இந்த  பிரச்சாரத்தில்  தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.அப்போது  பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை பாதுகாப்பாக மீட்ட பெருமை மோடியைச் சாரும் எனக் கூறினார்.

தேர்தல் பிரச்சாரங்கள் போது ராணுவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேர்தல் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் தேர்தல்  விதிமுறையை  மீறி  ராணுவ வீரர் அபிநந்தனை பெயரை பயன்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த திருமாவளவன் கூறுகையில்  முதல்வருக்கு தேர்தல் விதிமுறை தெரியுமா என்று  தெரியவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.