அதிமுகவிற்கு எல்லாம் சாதகம் தான் – அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்!

Minister KC Karuppannan has said that whether the Rajinikanth party starts or not, everything will be in favor of the AIADMK.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுபோன்று, ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினி, தான் கட்சி தொடங்கவில்லை என இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உடல்நிலை காரணமாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படியும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை, இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.