பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் உதவி.! முதல்வர் அறிவிப்பு.!

திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.

திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.

மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை  உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.