அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும்..!எழும்பூர் நீதிமன்றம்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்று  எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்று  எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு என்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக  சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறையிடம்  வருமானவரித்துறை  அனுமதி கேட்டது.இதன்பின்  சசிகலாவை டிசம்பர் 13,14ஆம் தேதிகளில் வருமானவரித்துறை விசாரிக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்தது .இந்நிலையில்  2 நாட்களாக சசிகலாவிடம் நடைபெற்று வரும் நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் .டிசம்பர் 20ல் பெங்களூரு சிறையில் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக வேண்டும் என்று  எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.