திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் மாரடைப்பால் காலமானார் – முக ஸ்டாலின் இரங்கல்
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இறந்ததையடுத்து முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கழகத்தின் இடி முழக்கம், மாணவப் பருவத்திலேயே போர்ப்பரணி பாடிய அண்ணன் ரகுமான்கானை இழந்து தவிக்கிறேன். அவர் தந்த ஆலோசனைகள் அட்சயபாத்திரம். அவரது மூச்சு நின்றாலும் அவரின் எழுத்தும், பேச்சும் என்றும் நம் கண்களிலேயே நிற்கும்! அண்ணனின் மறைவிற்கு கனத்த இதயத்துடன் என் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…