LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

tamil live news

சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். அவர்கள் பயணித்த SpaceX Crew-9 விண்கலம்,ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கடல்பகுதியில் இறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் 270 நாட்களுக்கும் மேலாக அங்கேயே சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்