இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், புயல் பாதிக்கும் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை இன்று மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.கஜா புயல் பாதிக்கும் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.