மெல்லமாக குறைந்த தங்கம் விலை...இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270க்கு விற்பனை.

gold rate update

சென்னை :சென்னையில் இன்று (நவம்பர் 7, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 6) ஒரே நாளில் இரு முறை உயர்ந்து மாலையில் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.11,320-ஆகவும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,560-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கமும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,400-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.75,200-க்கும் விற்பனையாகிறது.கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் நகை வாங்குவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தீபாவளிக்குப் பிறகே சிறிது குறைவு ஏற்பட்டது. ஆனால் நவம்பர் தொடக்கத்தில் மீண்டும் ஏற்ற இறக்கம் தொடர்ந்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு, பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவை இந்தியாவில் தங்க விலையை நேரடியாகப் பாதிக்கின்றன.வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை ஏற்ற இறக்கமின்றி நிலையாக உள்ளது.

மேலும், தங்கம் விலை குறைவு, திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்திற்கு நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. இருப்பினும், சர்வதேச பொருளாதார நிலைமைகள் மாறினால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதால், வாங்குவோர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.