அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold rate

சென்னை :புத்தாண்டின் முதல் நாளில் தங்க விலை குறைந்து நகை பிரியர்களை மகிழ்வித்த நிலையில், நேற்று சற்று உயர்ந்தது. இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.480 இறங்கி ரூ.1,00,160-ஆகியுள்ளது. இந்த இறக்கம் சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு சரிவு காரணமாக ஏற்பட்டுள்ளது.நேற்று (ஜனவரி 2) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.12,580, சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640-ஆக இருந்தது.

இன்றைய குறைவால் சவரன் விலை ரூ.1 லட்சத்திற்கு சற்று மேல் உள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.10,445, சவரனுக்கு ரூ.360 இறங்கி ரூ.83,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் குடும்பங்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 இறங்கி ரூ.256-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.2,56,000-ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் – வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கம் கண்டு வந்த நிலையில், இன்றைய குறைவு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சிலர் இப்போதே வாங்கி பாதுகாக்கலாம் என்று யோசிக்கின்றனர்.தமிழ்நாட்டில் தங்கம் விலை ஏற்ற இறக்கம் மக்களைப் பாதித்து வருகிறது.

திருமண சீசன், பண்டிகை காலத்தில் நகை வாங்கும் பழக்கம் உள்ளதால், விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வாங்குபவர்கள் தூய்மை சான்று, எடை அளவு, உழைப்பு சார்ஜ் ஆகியவற்றைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.