சென்னை :இன்று (நவம்பர் 8, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.11,300-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.240 உயர்ந்து ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 7) கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-ஆகவும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்பிறகு விலை சரிவைச் சந்தித்தது. அக்டோபர் 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது, 28-ஆம் தேதி ரூ.2,200 குறைந்து ரூ.89,000-க்கும் கீழே சென்றது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து விலை ஏற்ற இறக்கத்துடன் ரூ.90,000 அளவிலேயே ஏறி இறங்கி வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம் :
நவம்பர் 8 – ரூ.90,400,
நவம்பர் 7 – ரூ.90,160,
நவம்பர் 6 – ரூ.90,560,
நவம்பர் 5 – ரூ.89,440,
நவம்பர் 4 – ரூ.90,000.
நேற்று முன்தினம் (நவம்பர் 6) சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560-ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.400 குறைந்து, இன்று மீண்டும் ரூ.240 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை ஏற்ற இறக்கமின்றி நிலையாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு, பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவை இந்தியாவில் தங்க விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி தங்க நகை வாங்குவோர் தொடர்ந்து விலை நிலவரங்களை கவனித்து வருகின்றனர்.
