குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கு விற்பனை.

gold price today update

சென்னை :சென்னையில் தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரங்கள், டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போக்குகள் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்க விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் காண்கிறது.கடந்த சில மாதங்களாக தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த 17-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்பிறகு விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்தது. நேற்று (நவம்பர் 5) ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது.இன்று (நவம்பர் 6) மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது.

சென்னை சந்தையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதேநேரத்தில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,64,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் வாங்குவோர், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருப்போர் இந்த விலை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.