40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த அரசு பேருந்து!

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி என்ற இடத்திற்கு சென்ற போது, கொடைக்கானல் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி என்ற இடத்திற்கு சென்ற போது, கொடைக்கானல் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்தவிபத்தில், 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.