விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

மாணவர்களே.. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09.11.2024) சனிக்கிழமை விடுமுறை கிடையாது.

tn govt

சென்னை :தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில் நவ.1ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையான நாளை, வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அரசு அலுவலகங்களும் செயலம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மின் கட்டணம் செலுத்தலாம்

மேலும், தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறையாகும். தீபாவளியையொட்டி, நவ.1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனை ஈடுசெய்யும் வகையில், 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. அதனால், மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்துவோர் நாளையும் செலுத்தலாம்.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும். இந்த முகாம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னையில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.