நவம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது.இதன் விளைவாக ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.
unknown nodeஇந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7,000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் எனபது உட்பட பல்வேறு கோரிக்கையை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றது.தற்போது நவம்பர் 1-ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது .ஆனால் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.