மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
மக்களவை தேர்தலை யொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மட்டும் இதுவரை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க 5 தொகுதிகள் ஒதுக்கி இருந்தனர்.தற்போது அந்த 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தெரிவித்தார்.
unknown nodeஆனால் வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிடாமல் தன்னிச்சையாக வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்(தற்போதைய மத்திய அமைச்சர்)
சிவகங்கை-ஹெச்.ராஜா
ராமநாதபுரம்-நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி-தமிழிசை சௌந்தர்ராஜன் (தற்போதைய தமிழக பாஜக தலைவர்)
கோயம்புத்தூர்-சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.