ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறுக்கு விசாரணைக்கு ஆஜர் ..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக சாமி ஆணையம் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியது. டிசம்பர் 14ம் தேதி  நேரில் ஆஜராகி விளக்கம் தர நோட்டீஸ்  அனுப்பப்பட்டது.இதன்பின்  டிசம்பர் 14ம் தேதி  ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.இந்நிலையில்  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மீண்டும் நேற்று முன்தினம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நேற்று முன்தினம் ஆஜராகாத நிலையில் இன்று ஆஜராகியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.