சென்னை :சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையேகோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, மயிலாப்பூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், புழல், அண்ணாநகர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடி கனமழை பெய்தது.
குறிப்பாக, நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை5 முதல் 50 நிமிடத்தில் 5 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விட பெற்றோர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
