#Heavy Rain 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூரில் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.