தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம்..!!

According to the Chennai Meteorological Department, hot air will continue to blow in Tamil Nadu due to rising temperatures.

தமிழகத்தில் வெப்பநிலை உயரும் காரணத்தால் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4முதல் 6 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பநிலையாக உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.