சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில், “அப்போ சிஎம், இப்போ பிஎம்” என்று தாயார் ஷோபா சந்திரசேகர் பேசியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து விஜய் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்திய விழாவில், அவரது தாயார் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேர், தாய் சோபா ஆகியோர் தவெக கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளித்த புஸ்ஸி ஆனந்த், அவர்கள் காலில் விழுந்து ஆசியும் பெற்றார்.
பின்னர், அவர்கள் 2 பேரும் பந்தலில் கட்சியின் நிர்வாகிகள் உடன் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். விழாவுக்குள் வரும்போது 2 பேரிடமும் பேசாத விஜய், கடைசியில் சில நொடிகள் மட்டும் பேசினார். விழா மேடையில், தனது கடைசி உரையின் போது, “கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த எனது அப்பா அம்மாவிற்கு எனது நன்றிகள்” என இருவருக்கும் நன்றி கூறிவிட்டு கீழே இறங்கினார்.
இதனிடையே, விழாவில் அவருடைய தயார் ஷோபனா விஜயை பார்த்து அவருடைய கையை பிடித்து பேச முயன்றார். ஆனால், விஜய் அதனை கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் பாசமான தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய், நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை தான். தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று என்றும், பெண்ணியம் காப்பாற்று எனவும், புரட்சிகர திட்டங்கள் தீட்டு என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி என்று கூறியதோடு,” ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother), இன் நான் ஒரு PM (Proud Mother) ”என்று கலகலவென பேசினார்.
