விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன்...! கமல்ஹாசன்

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் என்று  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரலில்

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் என்று  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சென்னையிலும் போராட்டம் செய்து வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.இதன் பின்னர்   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன்.கஜா புயல் நிவாரண பணிகளை அரசு சரியாக செய்யவில்லை என கூறுவதை எதிர்க்கட்சியின் குரலாக பார்க்காமல், மக்களின் குரலாக பார்க்க வேண்டும் என்றும்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.