பொது இடத்தில் சிலை வைப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

The Government of Tamil Nadu has filed a reply petition in the High Court in a case related to the placing of idols in public places.

பொது இடங்களில் சிலை வைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில சிலைவைக்க அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் சிலை அமைக்கப்படுகிறதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய துறை சார்ந்த  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் அனுமதியின்றி வைத்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை அகற்ற கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில், கோவை அவினாசி சாலையில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.