முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

2026 சட்டமன்றத் தேர்தலைத் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டே எதிர்கொள்ள வேண்டும். தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்ன? பார்க்கலாம்.

TamilagaVettriKazhagam

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அகக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 தீர்மானங்கள் ஏற்றி மாநிலச் செயற்குழுக் கூட்டம் முடிவு பெற்றது.

என்னென்ன தீர்மானங்கள்.?

தீர்மானம் 1: பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.

தீர்மானம் 2: கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

தீர்மானம் 3: விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் 4: நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

தீர்மானம் 5: பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.

தீர்மானம் 6: மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 7: என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.

தீர்மானம் 8: விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.

தீர்மானம் 9: திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.

தீர்மானம் 10: தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 11: ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.

தீர்மானம் 12: அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானம் 13: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்.

தீர்மானம் 14: இருமொழிக் கொள்கை தீர்மானம்.

தீர்மானம் 15: தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 16: கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.

தீர்மானம் 17: த.வெ.க.விற்கு எதிரான கபட நாடக தி.மு.க அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.

தீர்மானம் 18: தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

தீர்மானம் 19: காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.

தீர்மானம் 20: பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies