தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடலோர பகுதிகளில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை உள்மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.