தருமபுரியில் பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தருமபுரியில் பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.விரைந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அதேபோல் ஈழம் ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஆகும் . இலங்கை அரசை தீர்மானிக்கும் வலிமையில் தமிழர்கள் உள்ளனர். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. 7 பேரை விடுவிக்க அரசு உள்பட அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைக்கிறோம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.