தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் படு தோல்வி அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசையைதிமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்து 47 ஆயிரத்து 209வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர்கனிமொழி -563143வாக்குகள் பெற்றுள்ளார்.தமிழக பாஜக தலைவர்தமிழிசை- 215934வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.
மேலும் பாஜகவின் மற்றொரு நட்சத்திர வேட்பாளரான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியை தழுவி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்வசந்தகுமார்- 627235வாக்குகள் பெற்றுள்ளார்.பொன்.ராதாகிருஷ்ணன் -367302வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.வசந்தகுமார்- 259933வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மற்றொரு முக்கியமான வேட்பாளரான பாஜக தேசிய செயலாளர்ஹெச்.ராஜாவும்சிவகங்கைதொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன்கார்த்தி சிதம்பரம்போட்டியிட்டார்.இவர்566104வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.ஆனால்ஹெச்.ராஜா 233860வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.கார்த்தி சிதம்பரம் 332244வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும் பாஜகவின் மற்றொரு வேட்பாளரானராதாகிருஷ்ணன் கோவைதொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்நடராஜன் 571150வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.ராதாகிருஷ்ணன் 392007வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.நடராஜன் 179143வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த முக்கிய வேட்பாளர்களின் தோல்வி பாஜகவிற்கு தமிழகத்தில் பெரும் அடியாக அமைத்துள்ளது அரசியல் விமர்சகர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.