கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும்!

Ministerial announcement that the conditions will be changed to "first generation graduate" instead of first graduate.

முதல் பட்டதாரி என்பதற்குப் பதிலாக ” முதல் தலைமுறை பட்டதாரி” என்று நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்றும் இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ.5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.3,000 ஆகவும், பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அனைத்து கள்ளர் தொடக்க பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்குப் பதிலாக ” முதல் தலைமுறை பட்டதாரி” என்று நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழிக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்றும் பேரவையில் அமைச்சர் குறிப்பிட்டார்.