நகை வாங்க நல்ல நேரம்? இன்றைய விலை நிலவரம் இதோ!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600குறைந்து, ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price tn

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமான அளவு சரிந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.12,100-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.96,800-க்கும் விற்பனையாகிறது.

இந்த தொடர் சரிவு நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் அதிரடியாக எகிறி பல புதிய உச்சங்களை தொட்டது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ.1.5 லட்சத்தை நோக்கி நகர்ந்த நிலையில், சாமானிய மக்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது.

திருமண சீசன் நெருங்கும் நிலையில் தங்கம் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சரிவு மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.நேற்று (பிப்.4) தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு சென்ற நிலையில், இன்று மீண்டும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இதேபோல வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், கிலோ ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இந்த சரிவு சர்வதேச சந்தை ஏற்ற இறக்கம், டாலர் மதிப்பு மாற்றம், உள்ளூர் தேவை குறைவு ஆகியவற்றால் ஏற்பட்டதாக ஜுவல்லரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒட்டுமொத்தமாக, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,12,960-க்கும், கிராம் ரூ.14,120-க்கும் வந்துள்ளது.

வெள்ளி கிலோ ரூ.2,80,000-க்கு குறைந்துள்ளது. புத்தாண்டு தொடங்கியதிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த விலை இப்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது. திருமண சீசன் நெருங்கும் நிலையில் இந்த சரிவு நகை பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சந்தை இன்னும் ஸ்திரமடையும் வரை ஏற்ற இறக்கம் தொடரலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் தினசரி சந்தை நிலவரத்தை கவனித்து முடிவெடுப்பது நல்லது.