நேரடி விவாதம் நடத்த முதல்வர் தயாரா? – தயாநிதி மாறன் சவால்

Edappadi government is number one in corruption, says DMK MP at Grama Niladhari meeting Dayanidhi Maran said.

ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பெரியார் தெருவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய தயாநிதி மாறன், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு ஆதாரம் உள்ளது. ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றசாட்டினார். நேரடி விவாதம் நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா என சவால் விடுத்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் தான். அதன் பின் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.