இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate news

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து ரூ.1,02,640-ஆகியுள்ளது. இந்த உயர்வு சர்வதேச சந்தை ஏற்றம் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தங்க நகை விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் தங்க விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்போது தங்கத்தில் முதலீடு அதிகரிப்பது வழக்கம்.

இந்தியாவில் தங்க நகை உற்பத்தியில் மும்பை முதலிடத்திலும், கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டின் கோவை மூன்றாம் இடத்தில் உள்ளது. தங்க விலை உயர்வு நகை உற்பத்தி மற்றும் விற்பனையைப் பாதிக்கும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருமண சீசன் நெருங்கும் நிலையில் விலை உயர்வு குடும்பங்களுக்கு சுமையாக உள்ளது.இந்த விலை உயர்வு தொடர்ந்து ஏற்பட்டு வருவது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள், எண்ணெய் விலை மாற்றங்கள் ஆகியவை தங்க விலையைப் பாதிக்கின்றன. வாங்குபவர்கள் தூய்மை சான்று, எடை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.