சென்னை : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று அதிரடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று (ஜூன் 13) மேலும் அதிகரித்து நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை நிலவரம் (22 கேரட்)
ஒரு கிராம் விலை : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் விலை : கிராமுக்கு ஏற்பட்ட உயர்வால், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,880 என்ற புதிய இமாலய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையைப் போலவே இன்று வெள்ளியின் விலையும் மளமளவென ஏறுமுகமாகவே மாறியுள்ளது.
ஒரு கிராம் வெள்ளி : வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி : அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.5,000 வரை அதிகரித்து, ரூ.2,70,000 ஆக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொடர் விலை உயர்வு, திருமண சுபகாரியங்களுக்கு நகை எடுக்கக் காத்திருக்கும் நடுத்தரக் குடும்பங்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
