பெண்கள் நலனுக்கான திட்டங்கள் அதிகம் நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான் – மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே அவளிவணல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மக்கள் மத்தியில் பேசிய போது தமிழகத்தில் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும், நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா எனவும் கலகலப்பாக பேசியுள்ளார்.
அதன் பின் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 1988ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் சுய உதவி குழு தலைவராக இருந்தபோது அனைவருக்கும் கடன் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆண்களுக்கு சமமாக பெண்களும், பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025