இது ஆட்சியல்ல, வெற்று நாடகக் காட்சி – டிடிவி

எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம்.

எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம்.

தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என குற்றசாட்டியுள்ளார்.

எத்தனையோ விஷயங்களில் தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவரும் திமுக அரசு, நெருக்கடியான நேரத்தில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றிய செவிலியர் பிரச்னையிலும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் நடப்பது இது ஆட்சியல்ல, எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி என்பதற்கு செவிலியர்களை பணிநீக்கம் செய்திருப்பது மற்றுமொரு சாட்சி என தெரிவித்துள்ளார்.