தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை போயஸ் போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு, தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்துக்கு பொன்னாடை மற்றும் தாமரை மலரை கொடுத்தனர். ரசிகர்கள் வழங்கிய தாமரை மலரை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
unknown node