1,00,00,000 ரூபாய் நிதியை தமிழக திறன் மேம்பாட்டிற்காக அளித்த உலகநாயகன்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார்.அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

unknown node

நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக பாராட்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழா மூலம் கிடைக்க பெற்ற 1 கோடி ரூபாயை பரமக்குடியில் அமைய உள்ள திறன் மேம்பாட்டு மையத்திற்கு அளித்துள்ளார். இந்த நிகழ்வின் போது கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.