ஒத்தைக்கு ஒத்த மோத ரெடியா?22 ஆம் தேதி கனிமொழி வேட்புமனு தாக்கல்?

this news gives information about Kanimozhi nomination on 22nd day

மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கனிமொழி வரும் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போகும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரும் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது . நேற்று துவங்கிய மனு தாக்கல் தற்போது வரை 10 சுயேச்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக என்ற மாபெரும் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழகத்தில் மகளிருக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவருவமான கனிமொழி வரும் 22ம் தேதி தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும் அதே தொகுதியில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடப்போவதாகவும் தெரிகிறது. முன்னதாக யார் போட்டியிட்டாலும் களத்தில் சந்திப்போம் என கனிமொழி சூளுரைத்திருந்தார்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்த அன்றைய தினமே திருச்செந்தூரிலிருந்து பிரச்சாரத்தை சூறாவளியாய் துவக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.