கரூர் சம்பவம் : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான மனுக்கள் மீது இன்று (அக.13) உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

Supreme Court tvk

சென்னை :கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை குறித்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அமைக்க உத்தரவிட்ட நிலையில், த.வெ.க. உள்ளிட்ட பல தரப்புகள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு விசாரித்து, அக்டோபர் 13 (இன்று) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவு, விசாரணையின் திசையை தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாக அமையும்.சென்னை உயர் நீதிமன்றம், சம்பவத்தின் காரணங்களை ஆராய ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் SIT அமைக்க உத்தரவிட்டது.

இதில், கூட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பின்மை, போலீஸ் பொறுப்பின்மை போன்றவை ஆராயப்படுகின்றன. த.வெ.க. தரப்பு, SIT விசாரணைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தது. விஜய் தப்பி ஓடவில்லை, போலீஸ் அறிவுறுத்தலால் வெளியேறினார் என்று அவர்கள் வாதிட்டனர். சிபிஐ விசாரணை கோரிய மனுக்களும் இணைந்துள்ளன. உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் வைத்தார்.

இந்த விசாரணை, சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்தும்.தமிழ்நாடு அரசு தரப்பு, “உயிரிழந்த சிறுவனின் தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது” என்று கூறி, அனைவரின் வலியையும் அறிந்ததாக தெரிவித்தது. உயர் நீதிமன்றம்தான் SIT அதிகாரியை நியமித்தது, அரசு அல்ல என்று வாதிட்டது. அஸ்ரா கர்க், CBI போன்ற மத்திய அமைப்புகளில் பணியாற்றிய சிறந்த அதிகாரி என்று பாராட்டினார். “ஒரு நபரின் வலியால் சிபிஐ மாற்றம் கோரக்கூடாது. உள்ளூர் அதிகாரிகள் கள நிலையை அறிந்தவர்கள்” என்று அரசு வலியுறுத்தியது. CBI-க்கு வரம்பற்ற வழக்குகள் குவிந்தால் தாமதம் ஏற்படும் என்றும் கூறியது.

போலீஸ் விசாரணையில் தவறு இல்லை என்று அரசு வாதிட்டது. உச்ச நீதிமன்றம், மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது. அரசின் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. “கரூர் சம்பவத்தில் உண்மை வெளியாக வேண்டும், பரஸ்பர குறைகூற முடியாது” என்று நீதிபதிகள் கூறினர். “தேர்தல் பிரச்சார நெறிமுறை வழக்கில் SIT உத்தரவு எப்படி? கிரிமினல் வழக்காக பதிவு எப்படி?” என்று சரமாரி கேள்விகள் எழுப்பியது. அரசு, “41 உயிரிழப்பால் கிரிமினல் வழக்கு, பதிவாளர் உரிய நீதிபதி முன் பட்டியலிட்டார்” என்று பதிலளித்தது. அடுத்த விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும்.