கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வீடியோ விவகாரத்தில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மேத்யூ சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் ,மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.