விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர்-பிரேமலதா விஜயகாந்த்

this news given information about Like Vijayakantha, H. Raja is very courageous - Premalatha Vijayakanth

விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர் ஆவார் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும்  வெளயிட்டது தேமுதிக.

அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்த தேர்தலில் தனது பிரச்சாரத்தில்  திமுகவை அதிகம் விமர்சித்து வருகிறார் பிரேமலதா.குறிப்பாக திமுக பொருளாளர்  துரைமுருகனை  விமர்சனம் செய்து வருகிறார்.

unknown node

இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை  ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும்.கேப்டன் விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர் ஆவார். மனதில் பட்டதை தைரியாமாக அப்படியே பேசிவிடுவார்.எதற்கும் பயப்படாதவர் என்று  பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.