தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ் !!

This news gives information about List of candidates for DMDK candidate

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதேபோல் பாமக முதற்கட்டமாக 5 தொகுதிகளின் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதேபோல் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

unknown node

அதன்படி தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வட சென்னை -அழகாபுரம் மோகன்ராஜ்

கள்ளக்குறிச்சி -எல்.கே.சுதீஷ்

விருதுநகர்-அழகர்சாமி

திருச்சி- டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர்  எல்.கே.சுதீஷ்  போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.