மக்களவை  & சட்டமன்ற இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்

this news givies information about Lok Sabha & Assembly elections: AIADMK nominees today

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.

மக்களவை  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று  காலை மனுத்தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.அதேபோல் அதிமுகவின் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை.

பல்வேறு கட்ட குழப்பங்களுக்கும், கூச்சல்களுக்கும் பின்னர்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மக்களவை  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று  காலை மனுத்தாக்கல் செய்கின்றனர்.